சிமென்ட் விலை ‘கிடுகிடு’ மூட்டைக்கு ரூ.70 உயர்வு!!!!
கட்டுமான பணிக்கான சிமென்ட் விலை, ஒரே வாரத்தில் மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து விடுகிறது. இங்குள்ள சிமென்ட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து, சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.