இன்று அறுபத்துமூவர் வீதி உலா- மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்தனர்!!
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 63 நாயன்மார்கள் கபாலீசுவரரின் தொண்டர்கள் ஆவர். இவர்களை முன்னே அனுப்பி கபாலீசுவரர், அவர்களின் பின்னால் வீதி உலா வர உள்ளார். இந்த நிகழ்ச்சி 16 கால்மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 63 நாயன்மார்களும் கோவில் மாட வீதிகளை சுற்றி வலம் வருகிறார்கள். அவர்களுடன் கபாலீசுவரரும் வெள்ளி விமானத்தில் வலம் வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.