பக்தர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது – திருவண்ணாமலையில் கிரிவலம் அனுமதி..!!
தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள். அன்றை தினம் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கும். விடுமுறை தினத்திலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.