நேட்டோ நாடுகளை ரஷிய ஏவுகணைகள் தாக்கும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!!!

உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிவதை தடுக்க உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென நேட்டோ நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அப்படி செய்தால் ரஷியாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே நேரடி போர் ஏற்படும் என கூறி நேட்டோ நாடுகள் அதை மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சமூக வலைத்தளத்தில் வெளிட்ட வீடியோ பதிவில், “கடந்த ஆண்டு, ரஷியாவிற்கு எதிராக கடுமையான தடுப்பு தடைகள் இல்லை என்றால், அது ஒரு போரைத் தொடங்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு நான் தெளிவான எச்சரிக்கை விடுத்தேன், நாங்கள் சொல்வது சரிதான்.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் எங்கள் வானத்தை மூடவில்லை என்றால், ரஷிய ஏவுகணைகள் உங்கள் பிரதேசத்தில் விழுவதற்கு சிறிது நேரமே ஆகும். நேட்டோ பிரதேசம், நேட்டோ நாடுகளின் குடிமக்களின் வீடுகளில் ரஷிய ஏவுகணைகள் பாயும்” என கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.