நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!
மத்திய இணை அமைச்சர் முருகனின் குலதெய்வமான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி கிராமம், கே.புதுப்பாளையத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் முருகனின் குலதெய்வம் மற்றும் பயிடிக்குத்தலவார் எனும் பைரங்குலம் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.