ஏப்., 1 முதல் ஹோட்டல் பண்டங்கள் விலை உயர்வு???
உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா பயம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், சமையல் எண்ணெய், மளிகை, காஸ், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், சமையல் மாஸ்டர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது.
இதனால், உணவு பொருட்கள் விலையை, 10 முதல் 12 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏப்., 1 முதல் விலை உயர்வை அமல்படுத்துவது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.