உள்நாட்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவில் இருந்து சர்க்கரை, கோதுமை தானியங்கள் ஏற்றுமதி செய்ய ஆகஸ்ட் 31 வரை தடை!!

 போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளன. இதனால் ரஷியாவில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் சர்க்கரை மற்றும் தானியங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் தடை விதித்துள்ளார். முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி மற்றும் சோளம் ஏற்றுமதி செய்யவும் ஜூன் 30 வரை மிகல் தடை விதித்துள்ளார். உள்நாட்டு உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே உக்ரைன் – ரஷ்யா போரால், கருங்கடல் பகுதியில் இருந்து வர்த்தகம் தடைப்பட்டு இருப்பதால், இந்தியாவுக்கான பாமாயில் இறக்குமதி 18%-ம், சூர்யகாந்தி எண்ணெய் இறக்குமதி 50%ம் சரிந்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எண்ணெய் லிட்டருக்கு 50 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.கோதுமை, தாவர எண்ணெய்களின் விலை அதிகரித்து இருப்பதாலும் எரிவாயு விலை உயர்ந்து இருப்பதாலும் உணவுப் பொருட்கள் விலையை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பிப்ரவரி மாதத்திலேயே பிஸ்கட் உள்ளிட்ட தனது தயாரிப்புகளுக்கு 3 முதல் 13% வரை விலையை உயர்த்திவிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.