இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி..!!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ரூ.1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3%ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
இதனிடையே இலங்கை தங்கத்தின் இருப்பு அளவும் வேகமாக குறைந்து வருவதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 24 கேரட் தங்க நாணயம் 1 சவரன் ரூ. 1.50 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அதே போல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் 1 சவரன் ரூ. 1.38 லட்சத்தை எட்டியுள்ளது. இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தை நோக்கி பயணிப்பதால் அந்நாட்டு அரசும் மக்களும் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.