இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம்!!
ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பரியமன் நகருக்கு மேற்கே, கடற்பகுதியில், 16 கி.மீ., ஆழத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில், இது, 6.7 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே அமைந்துள்ள ஆக்ஸிடென்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள லுபாங் தீவுக்கு மேற்கே, கடற்பகுதியில், 28 கி.மீ., ஆழத்தில், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுமில்லை என்பதுடன், சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.