அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு: ஓ.பி.எஸ். இ.பி.எஸ். கண்டனம்…

மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்பொது சோதனை நடத்தி வருகின்றனர். கழக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு என்றும், கழகத்தின் மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.