வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 28, 29ல் வேலை நிறுத்தம்….
சென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எல்.ஐ.சி.,யில் வாரத்தில் ஐந்து நாள் வேலை அமலில் இருப்பது போல, வங்கிகளிலும் ஐந்து நாள் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், எல்.ஐ.சி., மற்றும் வங்கி ஊழியர்கள் இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 28, 29ம் தேதிகளில், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை