பெங்களூரு டெஸ்ட்: பாதுகாப்பை மீறி கோலியுடன் செல்பி எடுத்த ரசிகர்!
இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.
அவர்களில் ஒரு ரசிகர் தனது மொபைல் போன் மூலம் கோலி அனுமதியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.இதனால் அந்த பகுதியில் சிறிய சலசலப்பு காணப்பட்டது.இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்புப் பணியாளர்கள் ரசிகர்களை வெளியேற்றினர்.
முன்னதாக மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் போது ஒரு பார்வையாளர் விளையாடும் பகுதிக்குள் நுழைந்தார், ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.