சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு…
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விம்மோ நகர் (9 கி.மீ.,) வரை பயணிகள் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகரில் மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது. இதனையடுத்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து இந்த ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டது. இன்று முதல் இரு ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும். விம்கோ நகர் ரயில் நிலையத்தில், இம்மாதம் மட்டும் பயணிகள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை