ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை… மறந்து போன திட்டம்!!!
உடுமலை:ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்துவதில், ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில், 72 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், சேகரிக்கப்படும் குப்பை உரமாக மாற்றப்படுவதை உறுதி செய்யவும், ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக, திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாத நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படும் தொகை குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, விதி மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்