ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!
அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.