2021-2022ம் ஆண்டுக்கான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைப்பு; நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு!
2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக பி.எஃப் மீதான வட்டி இரண்டு ஆண்டுகளாக 8.50 ஆக இருந்த நிலையில்,தற்போது 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைக்கப்பட்டுள்ளது கோடிக்கணக்கான மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டிவீதத்தை முடிவு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், “ கடந்த ஆண்டில் நிலவி வந்த பிஎப் வட்டியான 8.5 சதவீதத்திலிருந்து 8.1% சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டு” முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிஎப் திட்டத்துக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த அளவு வட்டி என்று தகவல்கல் தெரிவிக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.