தைப்பூச திருவிழாவுக்கு அங்கீகாரம் ‘யுனெஸ்கோ’வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்!!
ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற, தமிழர்களின் தைப்பூச திருவிழா உள்ளிட்ட 10 சிறப்பு நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினத்தன்று அசுரனை அழிக்க அன்னை பார்வதியிடம் முருகன் வீர வேல் வாங்கிச் சென்றதாக கந்த புராணம் கூறுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.