தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி.. ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்!

:நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதும், தனது சொந்த மாநிலமுமான குஜராத்துக்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்றுள்ளார். அகமதாபாத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் அவர் நீண்ட தூரம் பேரணி சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் நின்று அவரை வரவேற்று கோஷமிட்டனர். பின்னர், அங்கு நடந்த பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார். தொடர்ந்து பஞ்சாயத்து மகாசம்மேளனத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசிபெற்றார். இருவரும் சிலமணி நேரங்கள் மனம்விட்டுப் பேசினார்கள். இதையடுத்து, மோடி தனது தாயுடன் இரவு உணவு அருந்தினார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காந்தி நகரில் வசித்து வருகிறார். பிரதமர் மோடி குஜராத் வரும்போதெல்லாம், தவறாமல் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றுச் செல்வார். டெல்லியில் மோடி இருந்தாலும், தாய்க்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.