தமிழகத்தில் 24-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது…
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 24-ம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று காலை முதல் தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்