கோவை ரயில்வே கோட்டம்: வலுக்க போகிறது போராட்டம்!!!
கோவை ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, இதுவரை 180 அமைப்புகள் ஆதரவு அளித்து கடிதம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக மூன்று எம்.பி.,க்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் இன்று கோவையில் நடக்கிறது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்பதே, இக் கூட்டத்தின் பிரதான கோரிக்கை. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களை, பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து, கோவை கோட்டத்தில் இணைக்க வேண்டும்; கோவை மாநகருக்கு ‘சர்க்குலர்’ ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு ரயில் சேவைகள் போன்ற கோரிக்கைகளும் விவாதிக்கப்பட உள்ளன,” என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி