உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45.50 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.89 கோடியாக உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உலகம் முழுவதும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45.50 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 45,50,52,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,89,81,589 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 57 ஆயிரத்து 244 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 6,00,13,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66,466  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  பாதிப்பு-  8,11,54,960, உயிரிழப்பு –  9,93,044, குணமடைந்தோர் – 5,57,57,373
இந்தியா   –      பாதிப்பு – 4,29,87,461, உயிரிழப்பு –  5,15,833, குணமடைந்தோர் – 4,24,26,328
பிரேசில்   –      பாதிப்பு – 2,93,05,114, உயிரிழப்பு –  6,54,612, குணமடைந்தோர் – 2,75,56,598
பிரான்ஸ்       – பாதிப்பு – 2,33,81,279,  உயிரிழப்பு – 1,40,029, குணமடைந்தோர் – 2,20,87,946
இங்கிலாந்து-  பாதிப்பு – 1,95,30,485, உயிரிழப்பு –  1,62,738, குணமடைந்தோர் – 1,82,29,317]

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.