உக்ரைனில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு!!
ரியுபோல் : மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ரஷ்ய ராணுவத்தினர், கடந்த 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டுகளை பொழிந்து வான்வழி தாக்குதல் நடத்தி, நாட்டின் பிரதான நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.