சிறையில் சொகுசு வசதிகளுக்கு லஞ்சம்!!!
பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர் இளவரசி இருவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் விடுதலையாகினர். சிறையில் இருக்கும் போது, சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி, 2017ல் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்