சபரிமலையில் எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம்…
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தரிசனத்துக்கு இருந்த எண்ணிக்கை கட்டுப்பாடு நேற்று முதல் நீக்கப்பட்டது. எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. தினமும் தரிசனத்துக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை