ஆசிரியைகளை அதிரவைத்த கல்வி துறை!!!
அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியரின் மாதவிடாய் குறித்து தினமும் விபரம் கேட்பதால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட, எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க, ஆசிரியர்கள் பல மணி நேரம் மல்லுக்கட்டும் நிலை உள்ளது. இதன் ஒரு கட்டமாக, மாணவ – மாணவியரிடம் எட்டு வகைகளில், 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.