தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரிக்கு அனுமதியா: தீர்ப்பாயம் கேள்வி…
சென்னை: உத்திரமேரூர் அருகே, எடமச்சி கிராமத்தில், காப்பு காடுகள், தொல்லியல் சின்னங்கள் உள்ள பகுதியில் குவாரி துவங்க அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் ரத்தினம், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் கற்கள், மண் வெட்டி எடுக்க குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்து கோப்புகளையும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 28-ல் நடைபெறும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா