1 வீரருக்கு 10 ரஷ்ய வீரர் ஒரு பீரங்கிக்கு 50 பீரங்கி: – அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

உக்ரைன் அதிபர் மாளிகையில் இருந்தபடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ‘உக்ரைனுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தனது நட்பு நாடான  பெலாரஸ் வழியாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், பாதுகாப்பான முறையில் மக்கள் வெளியே அது அனுமதிக்கவில்லை. ஒரு சிறிய பாதையை திறப்பதற்கு பதிலாக, பெரிய வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கிறது. ரஷ்யாவுடன் மனிதாபிமான அடிப்படையில் போட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக உக்ரைனுக்கு கிடைத்தது ரஷ்ய டாங்கிகளும், ராக்கெட்டுகளும்தான்.

இன்னும் சொல்லப்போனால், மக்கள் வெளியேறுவதற்கான மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை அது புதைத்து வைத்துள்ளது. மரியுபோல் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு, மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு கூட அது அனுமதிக்கவில்லை. உக்ரைன் – ரஷ்ய படைகளுக்கு இடையிலான இடைவெளி பல நகரங்களில் குறைந்துள்ளது. ஒரு உக்ரைன் வீரருக்கு 10 ரஷ்ய வீரர்கள் வருகிறார்கள். ஒரு உக்ரைன் பீரங்கிக்கு 50 பீரங்கிகளை ரஷ்யா அனுப்பியுள்ளது. எங்கள் நாட்டின் நகருக்குள் அவர்கள் நுழையலாம். ஆனால், அங்கு அவர்கள் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்,’’ என்று பேசியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.