மரணத்தில் இருந்து தடுப்பூசி காக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!!

உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ‘கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும்,’ என தெரிவிக்கப்பட்டது. இது கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தடுப்பூசி குறித்த முழு விவரங்கள் கொண்ட ஆதாரங்களை அரசுகள் வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘கொரோ னா தடுப்பூசி போடுவதால்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மக்கள் இறக்காமல் காக்கப்படுகிறார்கள். கொரோனாவால் இறந்தவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். அதனால், தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்படுகிறது. மேலும், இது உருமாறிய கொரோனா, ஓமிக்ரான் என அனைத்திலும் இருந்தும் காக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.