புதிய பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பை கவனிங்க!!!
பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும், என, முதல்வருக்கு, பொள்ளாச்சி மக்கள், மனுக்களை அனுப்பி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். தென்னை நகரம்’ என்றழைக்கப்படும் பொள்ளாச்சி, ஆங்கிலேயர் காலத்தில், 1857ல் சப் – கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக இருந்தது. ஆனால், இன்னும் மாவட்ட அந்தஸ்து பெறாமல் உள்ளது.இதனால், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக வந்த எம்.எல்.ஏ., உதயநிதி, பொள்ளாச்சி மாவட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்றால், நகராட்சி தேர்தலில் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.