பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கப் போகிறேன்- டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

கடந்த மாத இறுதியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே கூறினார்.

ஐ.நா அகதிகள் நிறுவனம், செவ்வாயன்று அதன் பிரத்யேக இணையதளத்தில் 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என கூறியுள்ளது, அவர்களில் நூறாயிரக்கணக்கானோர் இளைஞர்கள் என்று ஜ.நா நம்புகிறது.
இந்நிலையில் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே இந்த ஆண்டு முழுவதும் தான் பங்கேற்கும் போட்டிகளின் பரிசுத் தொகையிலிருந்து தனது வருமானத்தை நன்கொடையாக வழங்கப் போவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உக்ரைனில் அதிகரித்து வரும் மோதலால் 7.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர், எனவே அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான கருவிகளை வழங்குவதற்கு யுனிசெப் உடன் இணைந்து பணியாற்றுகிறேன். மேலும் இந்த ஆண்டு முழுவதும் எனது பரிசுத் தொகையிலிருந்து எனது வருமானத்தை நன்கொடையாக வழங்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.