சபரிமலை நடை திறப்பு; இன்று கொடியேற்றம்!!!
சபரிமலை: பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று(மார்ச் 9) மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றத்துக்காக கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை சாஸ்தா கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிப்பட்டம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மார்ச் 17 சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 18ல் பம்பையில் ஆராட்டும் நடக்கும். இரவு சன்னிதானத்திற்கு சுவாமி திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.