கோவில் நிலங்கள் 31,000 ஏக்கர் அளவீடு…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில் நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவிடும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 31 ஆயிரம் ஏக்கர் நிலம் அளக்கப்பட்டுள்ளது. அவற்றில், அறநிலையத் துறை என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு வருகிறது.மீதமுள்ள நிலங்களை, 150 நில அளவையர் வாயிலாக, 56 ரோவர் கருவிகள் உதவியுடன் அளவிடும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

Leave a Reply

Your email address will not be published.