இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு….

ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே பதிவாகிறது.  
கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியாவில் ஒரே நாளில் 4,575 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இது நேற்றைய பாதிப்பான 3,993 ஐ விட சற்று அதிகரித்துள்ளது.   

ஒருநாள் கொரோனா நேற்று 3,993 ஆக இருந்த நிலையில் இன்று 4,575 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,71,308 லிருந்து 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 7,416 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,06,150 லிருந்து 4,24,13,566 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 145 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 355ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46,992 ஆக குறைந்தது. 
இந்தியாவில் ஒரே நாளில் 18,69,103 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 179.33 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.