ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்…
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நாளை(மார்ச் 10) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரத்திருநாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடப்பது வழக்கம். இதையொட்டி இதற்கான விழா நாளை காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 14 இரவு 8:00 மணிக்கு கருடசேவை, 18 காலை 6:00 மணிக்கு செப்பு தேரோட்டம், அன்று இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்ஸவம், மார்ச் 22 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், அறநிலை துறை அலுவலர்கள், கோவில் பட்டர்கள் செய்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.