முள்ளங்கியில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!!!

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. முள்ளங்கியில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும். முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது.  சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை

Leave a Reply

Your email address will not be published.