மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 191 ரன்கள் இலக்கு!!
மகளிர் உலகக்கோப்பை போட்டிகளானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது.
அணியின் தொடக்க ஆட்டக்கரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினாலும், பொறுப்புடன் விளையாடிய அணியின் கேப்டன் மரூப், கடைசிவரை களத்தில் 78 ரன்கள் குவித்தார். அலியா ரீயாஸ் 53 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அலானா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.