பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா கோலாகல தொடக்கம்!!!

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குண்டம் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வந்து அம்மனை வணங்கிச் செல்வார்கள். இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக இத்திருவிழா நடைபெறவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.