டாஸ்மாக் மது: ஏறும் விலையும் இறங்கும் தரமும்!!!
பல காலமாகவே மதுவின் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. அதே நேரம் மது அருந்துவோரின் எண்ணிக்கையும், பாட்டில்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. மற்ற எந்த பொருள், கட்டணம் விலையேற்றப்பட்டாலும், எதிர்ப்புக் குரல் எழும். ஆனால் மது விலை அதிகரிக்கப்பட்டால் உரத்த மவுனமே நிலவும். அல்லது சிலர் வரவேற்கவும் செய்வர். மதுவினால் உடல் நலக்கேடு, சமூக கேடு என பல தீமைகள் விளைவது இருக்கட்டும். அது எந்தத் தரத்தில் உள்ளது என்பது முக்கியம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது மது விலை உயர்வு அறிவிப்பு வந்திருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.