ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா ? அப்பல்லோ டாக்டர் விளக்கம்…
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர்கள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு தடை விதித்தது. அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ஜெயலலிதா அவர்களுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது என்றும்,உடனே அவருக்கு தேவையான மருத்துவ முறைகள் அனைத்தையும் தாங்கள் முறையாக பின்பற்றியதாகவும் அப்பல்லோ மருத்துவர் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா