சென்னை மாநகர பஸ்களில் கட்டணமின்றி தினமும் 8 லட்சம் பெண்கள் பயணம்…

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி  பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சென்னை மாநகர பஸ்களில் இத்திட்டம் தொடங்கியபோது 4, 5 லட்சம் பெண்கள் மட்டுமே பயணம் செய்தனர். ஆனால் தற்போது சராசரியாக 8 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்கிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி

Leave a Reply

Your email address will not be published.