கல்லூரி விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 10 மாணவர்கள் காயம்!!!!
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அங்குள்ள விடுதி சமையலறையில் நேற்று சமையல் நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு சிறிய 5 கிலோ கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.
அதில் 10 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை மாவட்ட மாஜிஸ்திரேட்டு சந்திரபிரகாஷ் சிங்கும், போலீஸ் சீனியர் சூப்பிரண்டும் சந்தித்துப் பேசினர். மாணவர்களின் காயம் கவலைப்படும்படி இல்லை என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.