உக்ரைனில் தொடரும் பயங்கர தாக்குதல் மீண்டும் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்…
உக்ரைனில் 12வது நாளாக நேற்றும் பயங்கர தாக்குதல் நடந்த நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய 4 நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மீட்பு பணிகளுக்காக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டது. அதே சமயம் மற்ற நகரங்களில் ஏவுகணைகள் மீது குடியிருப்பு பகுதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பயங்கர ஆயுதங்களை கொண்டு நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.