ஆசியாவின் மிகப்பெரிய யானை இலங்கையில் மரணம்!!!

ஆசியாவிலேயே மிகப் பெரியது என்ற பெருமை கொண்ட இந்திய யானை, இலங்கையில் மரணம் அடைந்தது. யானையின் மறைவுக்கு இலங்கை அரசு துக்கம் அனுசரித்தது. மேலும், யானையின் உடலை தேசிய பொக்கிஷமாக பாதுகாக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை என்ற பெருமை கொண்டது ராஜா, 69. கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தது. நம் அண்டை நாடான இலங்கையில் வசிக்கும் டாக்டர் ஹர்ஸா தர்மவிஜய என்பவர் இதை வளர்த்து வந்தார். கடந்த, 11 ஆண்டுகளாக நடுங்கமுவே என்ற இடத்தில் இருந்து கண்டிக்கு 90 கி.மீ., தூரம் நடந்தே செல்லும் ராஜா, அங்கு நடக்கும் உலகப் புகழ் பெற்ற ஊர்வலத்தில் புத்தரின் பல் இருக்கும் பேழையை தூக்கிச் செல்லும்

.வயது முதிர்வு காரணமாக இலங்கையில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் ராஜா நேற்று மரணம் அடைந்தது. யானையின் மரண செய்தி அறிந்து இலங்கை மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். இலங்கை அரசும் நேற்று துக்கம் அனுசரித்தது. இறந்த யானை ராஜாவை வருங்கால சந்ததி அறிந்து கொள்ளும் விதமாக அதன் உடலை தேசிய பொக்கிஷமாக பாதுகாக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.