அம்மன் கண்களில் வைத்த 2 முட்டை ரூ.17 ஆயிரம்!!!!
திருவண்ணாமலை மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் மயான கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், கிராம மந்தைவெளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் கண்களில் வைத்திருந்த இரண்டு முட்டைகள் ஏலம் விடப்பட்டன. அவற்றை, குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், அந்த முட்டைகளை அதிக விலை கொடுத்து பக்தர்கள் ஏலத்தில் எடுப்பது வழக்கம். இதன்படி, ஏலம் விடப்பட்ட முதல் முட்டையை, 15 ஆயிரம் ரூபாய்க்கு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.