வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு!!!

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் என்பவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. மேலும் சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் கழுத்தில் நான்கு வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து சதீஷ்குமார் மரணம் குறித்து முதலாவதாக விசாரித்த சி.பி.ஐ, அதனை தற்கொலை என்று முடிவு செய்தது. ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கொலை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published.