மெக்சிகோவில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்: 26 பேர் படுகாயம்!!!

2022 கிளாசுரா கால்பந்து தொடரின் ஒன்பதாவது சுற்று போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று குரேடாரோ நகரில் உள்ள லா கொரேகிடோரா மைதானத்தில், குரேடாரோ-அட்லஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.   

இந்த போட்டியின் போது திடீரென கலவரம் ஏற்பட்டது. போட்டியை காணவந்த ரசிகர்கள், தங்களுக்குள் ஒருவரையொருவர் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதனையடுத்து ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக பாதுகாவலர்கள் மைதானத்தின் கதவுகளைத் திறந்தனர். ஆனால், சிலர் வெளியேறுவதற்கு பதிலாக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர்.
அதில் 26 பேர் காயமடைந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிகப்பட்டது. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் மைதானம் முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது. 
இதனையடுத்து போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் தங்கும் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். மெக்சிகோ ரசிகர்களின் இந்த தாக்குதலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.