மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த முடிவு… ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!!
மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20% வரை உயர்த்த ஒன்றிய சாலை, போக்குவரத்து அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. காப்பீட்டு தொகை உயர்வை இதுவரை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்து வந்த நிலையில், முதன்முறையாக ஒன்றிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2011-2012ம் நிதியாண்டு தொடங்கி 2020-2021 வரை வாகன வாரியாக கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகை மற்றும் பெறப்பட்ட பிரீமியம் அடிப்படையில் இந்த உயர்வுக்கான பரிந்துரை முடிவு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகை உயர்வு குறித்து இணையதளங்களில் அறிவிப்பு வெளியாகி வரும் 14ம் தேதிக்குள் கருத்துக்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.