நடக்க இயலாத தன் மனைவியை சைக்கிள் ரிக்சாவில் வைத்து வாக்களித்த முதியவர்..!

உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரபிரதேச மாநில ஆஜம்கர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வயதான முதியவர் ஒருவர், நடக்க இயலாத தன் மனைவி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுடன் சைக்கிள் ரிக்சாவில் வந்து வாக்கு அளித்தார்.
அந்த வயோதிக பெண்கள் இருவரையும் அவர் தள்ளுவண்டியில் உட்கார வைத்து, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தன் கைகளால் சைக்கிள் ரிக்சாவை இழுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர்  கூறியதாவது, “எனக்கு முதுகு பிரச்சினை உள்ளது. மேலும், என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால்  நாங்கள் தள்ளுவண்டியில் வந்தோம்.நாங்கள் எங்கள் பொன்னான வாக்குகளை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.
மேலும், “மாநில அரசு அளிக்கும் ரு.500, 1000 எங்களை குணமாக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.