தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை..!!
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.