ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது…
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. விசாரணையில் பங்கேற்க அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் இன்று காலையில் 5 டாக்டர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். நாளை 6 மருத்துவர்கள் ஆஜராகிறார்கள். இதற்கிடையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை